நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட பின்னணி பாடகியுமான ரமணியம்மாள் இன்று காலமானார். அதாவது 69வயதான இவர் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மறைவானது திரையுலகையே சோகத்தில் மூழ்கடித்து இருக்கின்றது.
இதனையடுத்து இவர் நிகழ்ச்சிகளில் பேசிய பல விடயங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் நிகழ்ந்த ஆடியோ லான்ச் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரமணியம்மாள் "நான் கடவுள்கிட்ட எப்போ வேண்டிக்கிட்டாலும் உலக மக்கள் எல்லோருமே நல்லா இருக்கணும், எல்லாருமே பசி இல்லாமல் சந்தோசமாக சாப்பாட்டுடன் இருக்கணும் என்று நான் வேண்டிப்பேன்" என்றார்.
மேலும் "நான் மற்றவங்களுக்காக வேண்டிக்கிறதால தான் கடவுள் எனக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கார். இந்தளவிற்கு என்னை உயர்த்தி வைப்பார் என்று நான் நினைச்சுக் கூடிப் பார்த்ததில்லை. எங்கேயோ கிடந்த என்னை இந்தளவிற்கு கடவுள் கொண்டு வந்து நிக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணமே தூய மனசு தான்.
தூய உள்ளம் இருந்தால் நீங்களும் கண்டிப்பாக ஒரு பெரிய ஆளாக வரலாம். மற்றவங்களுக்கு கெடுதல் நினைக்கவே நினைக்காதீங்க. விரோதியாய் இருந்தாலும் அவங்களும் நல்லாய் இருக்கணும் என்று நினைச்சுக்கோங்க. கண்டிப்பாக உங்க வாழ்க்கை நல்லாய் இருக்கும்.
ஜீ தமிழில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக எனக்கு மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு கிடைத்தது. எங்க போனாலும் ரமணியம்மா ரமணிப்பாட்டி ஆசையாய் வந்து பேசி போட்டோ எடுப்பாங்க. ரொம்ப சந்தோசமாய் இருக்கும். இந்த வயசிலும் எதையும் சாதிக்க முடியும் என்பது முயற்சி இருந்தால் யாராலும் முடியும்.
ஆனால் என்னால முன்னாடி மாதிரி இப்போ பாட முடியல, இருந்தாலும் பல வாய்ப்புக்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. எனக்கும் ரொம்ப வயசாயிடிச்சு, எத்தனை நாளுக்கு உயிரோடு இருக்கப் போறேன்னு தெரியல, இருக்கிற வரைக்கும் பாடிட்டு இருக்கணும் என்பது தான் எனது நோக்கம்" எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறாக பல விடயங்களை அந்த விழா மேடையில் ரொம்ப எமோஷனலாக பேசியுள்ளார் ரமணியம்மாள்.
Listen News!