நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்த திரைப்படம் 'வாரிசு'. எஸ் தமன் இசையில் உருவாகி இருந்த இப்படத்தின் பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது.
அதிலும் குறிப்பாக, நடிகர் விஜய் மற்றும் மானசி ஆகியோர் பாடி இருந்த "ரஞ்சிதமே" பாடல், சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோரின் நடனம் ஒரு பக்கம் கவனம் ஈர்த்தாலும் விஜய்க்கு அருகே ஆடி இருந்த பெண் ஒருவரும் பலரை வெகுவாக கவர்ந்திருந்தார். ரஞ்சிதமே பாடலில் விஜய்க்கு அருகே சிவப்பு நிற புடவை அணிந்தபடி ஒரு இளம்பெண் நடனமாடி இருப்பார். மிகவும் எனர்ஜியுடன் பட்டையைக் கிளப்பி இருந்த அவரது நடனம், இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது.
அவரது பெயர் அம்பிகா கோலி ஆகும். மேலும் மும்பையைச் சேர்ந்த இவர் ஏராளமான பாலிவுட் திரைப்படங்களிலும் பேக்ரவுண்ட் டவுன்சராக ஆடியுள்ளார். இந்த நிலையில், டான்சர் அம்பிகா கோலி,பிரபல சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஞ்சிதமே பாடல் நடன அனுபவம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவலை அம்பிகா கோலி பகிர்ந்து கொண்டார்.அப்போது ரஞ்சிதமே பாடலில் சிங்கிள் ஷாட் நடனத்திற்காக நடிகர் விஜய் ரிகர்சல் செய்தது பற்றி பேசியிருந்த அம்பிகா கோலி, "ஒரு மணி நேரம் தான் நடிகர் விஜய் இந்த பாடலுக்காக ரிகர்சல் செய்தார்.
அதுவும் செட்டில் வந்த பிறகு தான் அசிஸ்டன்ட் நடன ஸ்டெப் போட்டு காண்பிக்க, கொஞ்ச நேரம் பயிற்சி செய்த பின் அவர் அதன் பின் மேஜிக் செய்து காட்டினார். அதேபோல இந்த நடனமும் சிங்கிள் டேக்கில் ஓகே ஆனது. யாராவது ஏதாவது சிறு தவறு செய்தால் இரண்டு அல்லது மூன்று டேக் வரை போகும் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் அது ஒரே ஒரு ஷாட்டில் ஓகே ஆனது. அந்த சிங்கிள் ஷாட் நடனத்திற்காக நாங்கள் ஒரு நாள் ரிகர்சல் எடுத்தோம். அதுவும் ஒரு நாள் முழுவதுமாக இல்லை, நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை ரிகர்சல் செய்திருந்தோம். அந்த சிங்கிள் டேக் நடனம் ஆடி முடிந்த பிறகு எங்களால் மூச்சு விட கூட முடியவில்லை. அந்த அளவுக்கு கடினமாக இருந்தது. ஆனால் விஜய் சார் எப்படி அதனை செய்தார் என்பதை நம்ப முடியவில்லை. மிக அற்புதமாக இருந்தது" என வியப்புடன் அம்பிகா கோலி குறிப்பிட்டுள்ளார்.
Listen News!