கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. கடந்த வாரம் 10ம் திகதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.
இப்படம் 1970களில் நடக்கும் கதைக்களத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருக்கும் பிரபல ரவுடி, அவனை வைத்து படம் இயக்கும் ஒரு இயக்குநர் என்ற முந்தைய ஜிகர்தண்டா படத்தின் கான்செப்ட் தான் இதிலும் உபயோகப்படுத்த பட்டிருக்கிறது.
இதில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்று வருகிறது, மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் செம்ம மாஸ் காட்டி வருகிறது.
இந்த நிலையில், குறித்த வேடத்தில் நடிக்க முதலில் எஸ்.ஜே.சூர்யா யோசித்தாராம். ஏனென்றால் மக்கள் மத்தியில் இயக்குனராக பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பல வருட போராட்டங்களின் பின்னரே நடிகர் என்ற இமேஜை ரசிகர்களிடம் மாற்றி இருக்கிறார்.
அதனை கருத்திற் கொண்டே, 'இப்போதுதான் என்னை முழு நடிகராக ரசிகர்கள் ஏற்றுகொண்டுள்ளனர். இப்போது நான் இயக்குனராக நடித்தால் சரியா வருமா மீண்டும் என்னை இயக்குனராக பார்க்க துவங்கிவிடுவார்கள். ஆகவே சில நாட்கள் டைம் கொடுங்கள் யோசித்துவிட்டு சொல்கிறேன்' என கார்த்தி சுப்புராஜிடம் சொல்லிவிட்டாராம்.
இதை தொடர்ந்து மாற்றுவழியின்றிய கார்த்திக் சுப்புராஜ், வேறு நடிகரை நடிக்க வைக்க முடிவெடுத்து பணிகளை ஆரம்பித்துள்ளார். எனினும், எஸ்.ஜே.சூர்யாவிடம் தயாரிப்பாளர் பேசிய நிலையில் அவரே நடிக்க சம்மத்தார் என கார்த்திக் சுப்புராஜே ஒரு பேட்டியில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!