• Sep 20 2024

எனக்கு அது பிடிக்கவில்லை-எல்லோர் முன்னும் உண்மையை கூறிய மைனா..வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக உள்ளது.மேலும்  அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்து இருக்கிறது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது. 

நீங்களும் ஆகலாம் மக்களின் ஸ்டார் டாஸ்க்கில் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் போட்டி போட்டு அதில் சிறந்த போட்டியாளர்கள் 5 பேர் தேர்வு செய்ய வேண்டும்.அத்தோடு தேர்வான 5 பேர் மட்டும் பிக்பாஸ் வீட்டில் நடக்க உள்ள பிரமாண்ட கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று பிக்பாஸ் ஒரு டாஸ்க்கை கூறிகிறார்.

இதில் தற்போது வெளியான ப்ரமோவில் வடிவேலாக நடிக்கும் மைனாவை வைத்து கதை கூற அதற்கு மைனாநந்தினி நடிக்க வேண்டும்.இவ்வாறுஇருக்கையில் நடிக்கும் மைனா எனக்கு இந்த காண்செப்ட் பிடிக்கவில்லை என நேருக்கு நேர் கூறிவிடுகின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement