பிரபல நடிகை டாப்ஸி தமிழில் ஏலியன் எனும் திரைப்படத்தில், ஹிந்தியில் ‘டன்கி’ படத்திலும், ‘ஃபிர் ஆயி ஹசீன் தில்ருபா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் டாப்ஸி சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.
அந்த பேட்டியில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார். அப்போது டாப்ஸியிடம் உங்களுடைய வாழ்நாளில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் என்ன..? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த டாப்ஸி என்னுடைய வாழ்க்கையில் நான் பல கஷ்டங்களை கடந்திருக்கிறேன்.
குறிப்பாக மாடலிங் துறையில் நான் நுழைந்த ஆரம்ப காலகட்டங்களில் ஏராளமான அழகி போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். அந்த சமயத்தில் இந்திய அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்டேன்.
ஆனால் அங்கு அரசியல் இருந்தது. இது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. என்னுடைய முடி சுருட்டை முடி என்பதால் மிகவும் ஏளனப்படுத்தியது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. எனவே பலரும் இப்படி ஒரு சுருட்டை முடியை வைத்து கொண்டு இந்திய அழகி போட்டியில் வெற்றி எல்லாம் பெற முடியாது என கேலி செய்தனர்.
அது மட்டுமில்லை ஒரு வேளை நீங்கள் இந்த இந்திய அழகி போட்டியில் வெற்றிபெற்றால் எங்களின் கார்ப்பரேட் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்றும், நீங்கள் வெற்றி பெற்ற தொகையில் 30 % எங்களிடம் கொடுக்க வேண்டும் என ஏராளமான நிபந்தனைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் விதித்தனர் இந்த நாட்கள் தான் மோசமான நாள்” என டாப்ஸி வேதனையுடன் கூறியுள்ளார்.
Listen News!