• Sep 20 2024

எனக்கு அந்த வார்த்தையே பிடிக்கல.. பிள்ளைகளின் வளர்ப்பு பற்றி விஜி சந்திரசேகர் ஓப்பன் டாக்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி குண சித்திர நடிகைகளில் ஒருவர் விஜி சந்திரசேகர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான 'தில்லுமுல்லு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் 'இந்திரா, பார்த்தாலே பரவசம், ஆயுத எழுத்து, ஆரோகணம், மதயானை கூட்டம், கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசேத்திர வேடங்களில் நடித்தார்.


இந்நிலையில் இவர் தன்னுடைய பிள்ளைகளை தான் எப்படி வளர்த்திருக்கேன் என்பது குறித்து பல விடயங்களை மனம் திறந்து கூறியுள்ளார். அதாவது "பெண்களை நான் தைரியாமாக வளர்த்திருக்கேன், அதேநேரத்தில் நிறைய values ம் சொல்லிக் கொடுத்திருக்கேன், அதேமாதிரி பசங்களுக்கு freedom கொடுத்திருக்கேன், ஆனால் அதை மிஸ்யூஸ் பண்ண விடல" என்றார். 

மேலும் "sleep over என்ற வார்த்தையே எனக்குப் பிடிக்கல, சின்னக் குழந்தைகளும் சரி, பெரியவங்களும் சரி sleep over என்ற பெயரில் அவங்க அங்க போவாங்களாம், இவங்க இங்க வருவாங்களாம், எனக்கு எங்க போனாலும் 6மணிக்குள்ள வந்திடனும்.


அவங்களும் இங்க sleep over வைச்சுக்க கூடாது, நீயும் அங்க sleep ஓவர் வச்சுக்க கூடாது, ஏனென்றால் இவங்க எல்லாருமே குழந்தைகள், அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியாது, அதாவது 10குழந்தைகளில் ஒரு குழந்தை தப்பான எண்ணத்தில் இருந்தாலும் மீதமாக இருக்கிற 9ம் கெட்டுப் போய்டும்" என்றார். 

அத்தோடு "அவங்க colleage இல் சேரும் போது நான் அவங்கள உட்கார வச்சு எல்லா விஷயத்தை பற்றியும் ஓபனாக பேசினேன், படிப்பில் ரொம்ப கவனம் வேணும், அதனால ஒரு பையன் மேல மனசு அலைபாயாமல் இருக்க வேண்டும். உனக்கு ஒரு பையனை பிடிச்சிருந்தாலும் உன் படிப்பு முடியிற வரைக்கும் நீ அதை மனசில வச்சிட்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தணும். 


படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறமாக தான் உன்னால உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியும். சரியான ஒரு ஆளை உன்னால தேர்ந்தெடுக்க முடியும். இப்படி நிறைய விடயங்களை நான் அவளிற்கு சொல்லிக் கொடுத்தேன்" எனவும் கூறியுள்ளார் விஜி சந்திரசேகர்.

Advertisement

Advertisement