தமிழில் பிக்பாஸ் சீசன்-6 கமல் தொகுத்து வழங்கி வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.21 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்த சூழலில், தற்போது 5 போட்டியாளர்கள் Finale வில் உள்ளனர். முன்னதாக, 7 போட்டியாளர்கள் இருந்த போது ஏடிகே எலிமினேட் ஆகி இருந்தார். அத்தோடு அவருக்கு அடுத்ததாக Finale வரை முன்னேறி இருந்த கதிரவன், 3 லட்ச ரூபாய் பண மூட்டையை எடுத்து விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.
இதனையடுத்து, தற்போது விக்ரமன், அசிம், ஷிவின், அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் Finale வில் உள்ளனர். இதற்கு மத்தியில் பணப் பெட்டி வைக்கப்பட்டு அதனை போட்டியாளர்கள் எடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த பெட்டியை யார் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மறுபக்கம், Finale நெருங்கி வருவதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதையும் பலர் கணித்து தங்களின் கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நிறைய கருத்துக்கள் பரவலாக ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது.
இவ்வாறுஇருக்கையில், முந்தைய சீசனில் உள்ள போட்டியாளர்கள் குறித்து ஜிபி முத்து மற்றும் மைனா நந்தினி ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது பேசும் ஜிபி முத்து, "இந்த சீசன்ல இருந்த 21 பேருமே பணம், காசுக்கு அப்பாற்பட்டு பாசத்துக்கு அடிமையாகி இருந்தவங்க. இதே முந்துன சீசன்ல எல்லாம் பணத்திமிர் கூட இருந்த நிறைய ஆளைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இதுக்கு முன்னாடியுள்ள சீசன் எல்லாம் ரொம்ப பாக்கல தான். ஆனா அவங்க உட்காரும் ஸ்டைலே பிடிக்காது. அத்தோடு கமல் சார் ஒரு நீதிபதியா வராங்க, அதுல கால் மேல கால் போட்டு இருந்தாங்க நிறைய பேர். அப்படிலாம் இருக்கவே கூடாது, அவங்கள எல்லாம் பிடிக்கவே இல்லை எனக்கு" என தெரிவித்தார். அப்போது அங்கே இருக்கும் விக்ரமன், கால் மேல் கால் போடுவது தவறில்லை என்றும் தெரிவிக்கிறார்.
எனினும் இதற்கான விளக்கம் கொடுக்கும் ஜிபி முத்து, "ஒரு நீதிபதி இருக்கிறார். அவர் முன்னாடி கால் மேல கால் போட்டு இருக்க முடியுமா?" எனக்கூறவே அதற்கு ஆதரவாக பேசும் மைனா நந்தினி, கால் மேல கால் போடுவது அவங்க அவங்க விருப்பம் தான் என்றும் ஆனால் மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில கொடுக்க வேண்டும் என்பதையும் விக்ரமனுக்கு அறிவுறுத்துகிறார்.
இதற்கடுத்து பேசும் ஜிபி முத்து, "முதல் ஒண்ணு, ரெண்டு சீசன்களில் கமல் முன்பே பலரும் கால் மேல் கால் போட்டு டீ குடித்துக்கொண்டு, அசால்ட்டா பேசுவதையும் பார்த்திருக்கிறேன்" என தெரிவிக்கிறார். ஆனால், அதே வேளையில் இந்த சீசனில் யாரும் அப்படி இல்லை என்றும், பணிவுடன் பண ஆசை இல்லாத ஆட்கள், மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆள்கள் இருந்ததும் இந்த சீசன் சிறப்பாக அமைய காரணம் என தெரிவிக்கிறார்.
Listen News!