பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தபன் திஷா பதானி. இவர் சோஷியல் மீடியாக்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருவார். இதனால் இவரது இன்ஸ்டாகிராமில் 52.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர்.
தற்போது திஷா, ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரொரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து
அந்த வகையில் சமீகத்தில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியின் போது மீடியாக்களை சந்தித்த திஷா பதானி, நான் நடித்த படங்களை திரையில் பார்க்க எனக்கு பிடிக்காது. எனது பெர்ஃபாமன்சை பார்த்து விட்டு அவர்களின் ரியாக்ஷனை பார்க்கவே கஷ்டமாக இருக்கும் என்றார். இதைக் கேட்டு அனைவரும் ஷாக்காகி விட்டனர். நீங்கள் உங்களை திரையில் பார்க்கும் போது எப்படி ஃபீல் பண்ணுவீர்கள் என்ற கேள்விக்கு தான் இப்படி ஒரு அதிர்ச்சி தகவலை திஷா பதானி அளித்துள்ளார்.
திஷா தனது பதிலில், என்னை திரையில் பார்க்க என்னாலேயே முடியாது. என்னை திரையில் பார்ப்பதை நான் வெறுக்கிறேன். என்னுடைய படங்களை நான் எப்போதெல்லாம் பார்க்கிறேனோ, அப்போதெல்லாம் கைகளால் முகத்தை மூடிக் கொள்வேன் என்றார்.
மேலும் திஷா பதானியுடன் ஜான் ஆப்ரகாம், வாணி கபூர், அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது வரை நடிக்காத ஒரு கேரக்டரில் தான் திஷா பதானி இந்த படத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து சித்தார்த் மல்கோத்ராவுடன் யோதா என்ற ஆக்ஷன் படத்தில் நடிக்க போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சசிகுமாரின் காமன் மேன் திரைப்படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு- தலைப்பைக் கேட்டாலே குலை நடுங்குது
- அடுத்த முதலமைச்சர் அண்ணாச்சியா? பற்ற வைத்த நடிகை ஊர்வசி- கழுவி ஊற்றத் தொடங்கிய ப்ளூ சட்டை மாறன்
- நடிப்பை தாண்டி இப்படியான தொழிலும் ஈடுபடுகின்றார்களா தமிழ் நடிகர்கள்..!
- நடிகை சத்யாபிரியா மகளா இது-அடேங்கப்பா பார்க்க சினிமா நடிகை போல இருக்கிறாரே
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!