தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் ஸ்ருதிஹாசன்.ஏழாம் அறிவு பெற்றுக்கொடுத்த வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் நடித்து வருகின்றார்.
தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அந்தவகையில் கடைசியாக அவர் 'வால்டர் வீரய்யா', 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தில் நடித்தார். தற்போது சலார் படத்தில் நடித்து வருகின்றார்.சலார் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி டன்கி படத்துக்கு போட்டியாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் "பிரசாந்த் நீலும், பிரபாஸும் கதை சொல்லலில் ஒரு மரபை வைத்திருக்கிறார்கள். இந்த சலார் படம் பிரபாஸுக்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த கதை அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியாகத்தான் இருக்கும். பிருத்விராஜ் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் அது என்னுடைய படமும்தான். சலார் படக்குழுவினரை போல் நான் இதுவரை பார்த்ததில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் தி ஐ திரைப்படம் பெண்களின் பார்வையில் ஒரு வன்முறை எவ்வளவு பெரிய வலியை கொடுக்கும் என்பதை பேசும். நான் சூனியக்காரி என்று அழைக்கப்படுவதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சூனியக்காரி என்ற வார்த்தையால் அழைக்கப்படுவதை நான் பாராட்டாகவே பார்க்கிறேன்.
இதனையடுத்து சமீபத்தில் அவர் வெளியிட்ட மான்ஸ்டர் மேஜிக் என்ற சிங்கிள் குறித்து பேசிய ஸ்ருதி, "எனது அப்பா கமல் ஹாசன் மிகச்சிறந்த பாடகர் என்று பலருக்கும் தெரியாது. ஆஷா போஸ்லே ஜி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி ஆர்.டி.பர்மன், இளையராஜா ஆகியோரையும் நான் கேட்டுதான் வளர்ந்தேன்.
க்ரிஸ் கார்னல் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். அப்பாவின் அட்வைஸ் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும். ஆனால் அவர் ஒரு கோணத்தில் பேசுகிறார். இருந்தாலும் சில சமயம் எனக்கு அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நம்புகிறேன். ஏனெனில் நான் இண்டஸ்ட்ரியின் முற்றிலும் மாறுபட்ட காலத்திலும் இடத்திலும் இருக்கிறேன். எனவே அவரது அறிவுரைகளை சில சமயங்களில் செயல்படுத்த முடியாமல் போகிறது." என முடித்தார்.
Listen News!