• Nov 10 2024

நயனிகா இப்படி மாறுவா என்று நினைக்கல சினிமாவில எல்லாம் பார்த்தாச்சு -ஜாலியாக பேசிய மீனா

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. தனது கண்ணழகினாலே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தற்பொழுது இவர் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் இறுதியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் இவருடைய கணவரான வித்யாசாகர் நுறையீரல் பிரச்சினை காரணமாக இறப்புக்குள்ளானார்.இவரது இறப்பிற்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.


அத்தோடு அவரது கணவன் இறப்பிற்கு பின்னர் மீனாவின் நண்பிகள் அடிக்கடி இவரது வீட்டிற்குச் சென்று ஆறுதல்படுத்தியதோடு இவரையும் அவரது மகள் நயனிகாவையும் அழைத்துக் கொண்டு அடிக்கடி வெளியில் சென்றும் வந்தனர். இதனால் தற்பொழுது இழப்பிலிருந்து மீண்ட மீனா தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.


இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மகள் குறித்து கூறினார். அதாவது நயனிகா தன்னுடைய அப்பா இனிமேல் வரமாட்டார் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டார். ரொம்ப ஸ்ரோங்காக இருக்கின்றார். அவளைப் பார்க்க எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கு. ஆனால் அவள் அதை ஏற்றுக் கொண்ட மனநிலையில் தான் இருக்கிறார்.


Advertisement

Advertisement