ஜெயிலர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அனிருத், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ் சிவன் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ஜெயிலர் படத்திலிருந்து வெளியான ஹுகூம் பாடல் சூப்பர்ஸ்டார் டைட்டிலுக்கு போட்டி போடுபவர்களை எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றும் பல சர்ச்சைகள் எழுந்தன.இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், இந்த சூப்பர்ஸ்டார் டைட்டில் சர்ச்சை குறித்தும் பேசி உள்ளார்.
அவர் கூறியதாவது : “ஹுகூம் பாடல் வரிகளை முதலில் நான் பார்த்தபோது தாறுமாறாக இருக்குனு சொன்னேன். அதேபோல் அதில் இருக்கும் சூப்பர்ஸ்டார்-ங்கிறத மட்டும் நீக்க சொன்னேன். சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான்.
இப்போ மட்டுமல்ல, பல வருடங்களுக்கு முன்னாடியே நான் சூப்பர்ஸ்டார் டைட்டிலை நீக்க சொன்னேன். அப்போ நான் பயந்துவிட்டதா சொன்னார்கள். நான் எதற்கும் பயப்படமாட்டேன், இறைவனுக்கும் நல்ல மனிதர்களுக்கும் மட்டுமே பயப்படுவேன். நல்ல மனிதர்களின் சாபம் நம்மை வீழ்த்திவிடும்.
அதனால் நல்ல மனிதர்களை நாம் புண்படுத்தக் கூடாது, ஆனால் அவர்களுக்கு பயப்பட வேண்டும்" எனக் கூறி ஜெயிலர் மேடையை தெறிக்கவிட்டார். இதன்மூலம் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து தனக்கு பயமே கிடையாது என ரஜினி பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Listen News!