• Sep 21 2024

அவருடைய மகள் என்று என்னை அடையாளப்படுத்த எனக்கு விருப்பமில்லை- ஓபனாகப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா

stella / 1 year ago

Advertisement

Listen News!


ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான்  ஏ.ஆர். ரஹ்மான். தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைவரது வரவேற்பையும் பெற்று தேசிய விருதையும் பெற்றார்.இதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு முன்னணி இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாடல்களில் எப்போதும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்தும் வழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் இசையமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்கூட பழங்கால கருவிகளை கொண்டு இசையமைத்தார். இவருக்கு  கதீஜா, ரஹீமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கிறார்கள். 


பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாத அவர்களில் அமீன் 2.0 படத்தில் இடம்பெற்ற புல்லினங்கால், பத்து தல படத்தில் இடம்பெற்ற நினைவிருக்கா உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அவரது குரலுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதீஜாவும் இப்போது இசையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஏற்கனவே அவர் தமிழில் சகவாசி என்ற பாடலை பாடியிருக்கிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சின்னஞ்சிறு என்ற பாடல், இரவின் நிழலில் காயம் என்று தொடங்கும் பாடல் உள்ளிட்டவைகளை பாடியிருக்கிறார்.

இவை தவிர ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ஃபரிஷ்டா என்ற சிங்கிள் பாடலையும் பாடி அசத்தினார். அந்தப் பாடலை தவிர்த்து ஆம்னா பிபி என்ற பாடலையும் அவர் பாடி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது அவர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவிருக்கிறார்.


இந்நிலையில் கதீஜா ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது "என்னை எனது குரலால் மற்றவர்கள் அடையாளப்படுத்த வேண்டும். இவரின் மகள், இவரின் மனைவி என்று என்னை அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை. நான் ஹிஜாப் அணிந்து வருவதை பலர் ட்ரோல் செய்யலாம். நான் அதற்கு தயாராகத்தான் இருக்கிறேன்.

 நான் பாடிய ஃபரிஷ்டா, ஆம்னா பிபி என்ற இரண்டு பாடல்களும் பழைய ஸ்டீரியோ டைப்புகளை உடைக்கும் வகையில் இருந்தவை. அதேபோல் காயப்பட்ட உலகத்தை ஆற்றுப்படுத்தி பழைய மரபுகளையும் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதையும் மாற்றும் நோக்கில் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement