• Nov 19 2024

கலாநிதி மாறன் தந்த car- ஆல் தான் நான் பணக்காரன் என்று உணர்ந்தேன்- ஓபனாகப் பேசிய ரஜினிகாந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  ரஜினிகாந்த்,மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்ணா மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர்.இப்படம் மொத்தமாக  700 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது.

படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் ஆகியோருக்கு  கலாநிதி மாறன் கார் பரிசாக வழங்கியிருந்தார்.கூடவே இவர்கள் மூன்று பேருக்கும் செக்கு வழங்கப்பட்டது. அந்த செக்கில் ரஜினிக்கு 30 கோடி ரூபாய், நெல்சனுக்கு ஐந்து கோடி ரூபாய், அனிருத்துக்கு இரண்டு கோடி ரூபாய் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.


மூன்று பேருக்கு பரிசு வழங்கப்பட்டதை அடுத்து ஜெயிலர் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. அதன்படி அவர்களை நேரில் அழைத்து தங்க நாணயமும், கேடயமும் கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு விருந்தும் பலமாக வைக்கப்பட்டது. பரிசை ரஜினிகாந்த் வழங்கினார். அப்போது விழாவில் ரஜினி பேசிய பேச்சு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், "ஜெயிலர் படம் வெற்றி அடைந்ததை அடுத்து கலாநிதி மாறன் எங்களுக்கு கார் வழங்கினார். அந்த காரில் அமர்ந்த பிறகுதான் உண்மையில் சொல்கிறேன் நான் பணக்காரன் என்று எனக்கு தோன்றியது. ஜெயிலர் படம் எல்லாம் முடிந்த பிறகு கண்ணனும், செம்பியனும் கலாநிதி மாறனை பார்க்க போயிருக்கிறார்கள்.


அப்போது படம் எப்படி இருக்கு என்று கலா சார் கேட்டிருக்கிறார். அதற்கு கண்ணனோ படம் சூப்பர் சார் என்றிருக்கிறார். ஆனால் கலாநிதி கண்ணனிடம் நீ நெல்சனோட நண்பன். அதனால் நீ இப்படித்தான் சொல்லுவ. செம்பியன் நீ சொல்லு படம் எப்படி இருக்கு என கேட்டிருக்கிறார். அதற்கு செம்பியன் படம் சுமார்தான் சார் என்று சொல்லிவிட்டார். அதேபோல் படத்தின் ரீ ரெக்கார்டிங்குக்கு முன்னதாக நானும் படத்தை பார்த்தேன். உண்மையில் வெளிப்படையாக சொல்கிறேன். படம் அப்போது அபோவ் ஆவரேஜாகத்தான் இருந்தது. 

 ஆனால், அனிருத் தனது இசையால் ஒரு மேஜிக் செய்துவிட்டார். அவரின் பின்னணி இசை மூலம் படத்தை எங்கேயோ தூக்கி கொண்டு போய்விட்டார். அவரின் இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். எனக்கும் அவரது நண்பர் நெல்சனுக்கும் ஹிட் கொடுக்க வேண்டும் என்று உழைத்தார். படத்தின் எல்லா பணிகளும் முடிந்த பிறகு படத்தை பார்த்த கலாநிதி என்னிடம் சார் இது 2023 பாட்ஷா சார் என கணித்தார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகுஇதேபோன்றொரு ஹிட்டைத்தானே அடுத்த படத்துக்கும் எதிர்பார்ப்பார்கள் என்று எனக்கு பயம் அதிகரித்திருக்கிறது" என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement