• Nov 14 2024

எனக்கு அவர் சொல்ல வந்ததே வேற ரொம்ப சந்தேகம் இருந்திச்சு- டிரம்ஸ் மணியிடம் மயில்சாமி சொன்ன முக்கிய விடயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!



பிரபல காமெடி நடிகர் மயில்சாமி, சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில்.. இவரை பற்றிய பல்வேறு தகவல்களை பிரபலங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் ஊடகங்கள் வழியாக பகிர்ந்து கொண்டு வரும் நிலையில், தற்போது ரம்ஸ் கலைஞர் சிவமணி பல விடயங்களைக் கூறியிருக்கிறார்.

அதாவது நான் எப்போதும் வாட்சாப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவேன்.என்னோட வாட்சப் குரூப்பில் மயில்சாமி இருக்கின்றார். நான் அன்று எங்க வீட்டில நடந்த கணபதி ஓமம் நிகழ்வு குறித்த வீடியோ ஒன்றினைப் போட்டிருந்தேன். அதில் பட்டுவேஷ்டி பட்டு சட்டை அணிந்திருந்தேன்.அதைப் பார்த்திட்டு மயில்சாமி ஒரு வொய்ஸ் மெசேஜ் போட்டாரு.அதில் நீங்க கருணாநிதி மாதிரியே இருக்கிறீங்க என்றார்.தொடர்ந்து சாமி நீங்க வடபழனி கோயில் ரம்ஸ் வாசித்து முடிச்சதும் எங்க ஊர் சிவன் கோயிலுக்கு வரணும். அங்க வந்து ரம்ஸ் வாசிச்சிட்டு அதுக்குப் பிறகு எங்க வேணும் என்றாலும் போங்க என்று கூறினார்.


இவர் அப்படி கேட்டதும் முதலில் யோசிச்சுச் சொல்லுறேன என்றேன். பின்னர் ஒரு வழியாக டைம் கிடைத்ததால் அங்கு டம்ஸ் வாசிக்கச் சென்றேன். எனக்கு அந்த கோயிலுக்கு போறதுக்கு வழி தெரியாமல் இருந்ததால் அவர் தான் மெயின் ரோடில் வந்து கூட்டிட்டு போனாரு. அதுக்கப்பிறம் நான் ரம்ஸ் வாசிக்க ஆரம்பிச்சேன். அவருக்கும் ரொம்ப சந்தோஷம். தான் கூப்பிட்டு நான் போனதால அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி.

இதை விட முக்கியமான விடயம் ஒன்று சொல்லனும் அவர என்கிட்ட மன்னிப்புக் கேட்டாரு ஏனென்றால் அவங்க கோயில்ல தீபத்திருநாளில் முதலில் ரம்ஸ் வாசிக்க சொன்னாங்க ஆனால் யாரோ இரண்டு பேருடைய தலையீட்டினால் அந்த நிகழ்ச்சி நடக்கவில்லை. அதற்கு சிவராத்திரி அன்று மன்னிப்புக் கேட்டாரு.அதே போல என்னுடைய மிகப் பெரிய ஆசை ஒன்றும் இருக்கு என்று சொன்னாரு. அதாவது இந்த சிவன் கோயிலில் இருக்கும் லிங்கத்திற்கு ரஜினி சேர் வந்து பால் ஊத்தனும் இது மட்டும் தான் ஆசை என்றாரு. பின்னர் கொஞ்ச நேரம் பேசிவிட்டு ரெண்டு பேருமே கிளம்பிட்டோம். ஆனால் அவர் அன்டைக்கு ரொம்ப டவுனாத்தான் இருந்திருக்காரு.அவர் முதலில் பேசி அனுப்பிய வாய்ச் மெசேஜிற்கும் இறுதியாக நன்றி தெரிவித்த வாய்ச் மெசேஜும் வித்தியாசமா தான் இருந்திச்சு. இதனால் அவரிடம் சொன்னேன் நல்லா ரெஸ்ட் எடு என்று சொன்னேன்.


என்னுடைய 40 வயது பிரண்ட் மயில்சாமி. அவர் நடிகர் எம்.ஜி.ஆரைப் பின்பற்றி வாழ்ந்து வருபவர். சிவராத்திரி அன்று கூட நல்லாத்தான் இருந்தாரு. முதலில் இந்த நிகழ்ச்சிக்கு மயில் கேட்ட போது முதலில் அவொய்ட் பண்ணலாம் என்று தான் நினைச்சேன்.பின்னர் ஏதோ கடவுளின் அருளால் தான் போய் அவருக்காக வாசிச்சிருக்கிறேன் இது எனக்கு நிம்மதியாக இருக்கிறது.

சிவராத்திரி அன்று சிவன் பக்தரான மயில்சாமி இறந்து நல்ல மோட்சத்தை அடைஞ்சிருக்காரு.நல்லது பண்ணினால் நல்லது நடக்கும் என்பது மட்டுமே அவரது எண்ணம். அவர் வீட்டுக்கு போனதுக்கப்பிறம் மீண்டும் அவரோட போன்ல இருந்து கோஃல் வந்திச்சு. அப்போ நான் கேட்டேன் என்ன மயிலு இன்னொரு தரம் பண்ணனுமா என்று கேட்ட போது அவருடைய மகன் சொன்னாரு அப்பா இறந்திட்டாரு என்றார்.


என்ன சொல்லுறீங்க எப்பிடி என்று கேட்ட போது ஆமாம் அங்கிள் வீட்டுக்கு வந்தாரு டிப்பன் சாப்பிட்டாரு.பின்னர் ஏதோ செய்யுது என்று சொன்னாரு அப்போ காரில் ஏத்திட்டு கொண்டு போகும் போது அப்பா போயிட்டாரு என்று சொன்னாரு. கேட்கும் போதே தாங்க முடில.என்னால அவருடைய வீட்டுக்கு நேராக சென்று அஞ்சலி செலுத்த  முடில ரொம்ப காய்ச்சலால் இருந்தேன்.அவங்க வீட்டம்மாவிடம் போன் பண்ணி பேசி ஆறுதல் தெரிவித்தேன் என்றும் கூறியுள்ளார்.





















Advertisement

Advertisement