• Nov 10 2024

படம் பண்ணியிருக்கேன் ஆனால் பணம் கிடைச்சது இல்ல-மகாலட்சுமி வந்த நேரம் எல்லாமே மாறிடுச்சு- எமோஷனலான ரவீந்தர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுபவர் தான் ரவீந்தர். இவர் தமிழ் சினிமாவில் தயார்ப்பாளராகவும் வலம் வருகின்றார்.இவர் கடந்த ஆண்டு பிரபல சீரியல் நடிகை விஜே மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்த கொண்டார். 

இந்த திருமணம் இருவருக்குமே இரண்டாவது திருமணமாகும்.மேலும் இவர்கள் திருமணம் செய்ததிலிருந்து இப்போது வரை ட்ரெண்டிங்கில் தான் இருந்த வருகின்றார்கள். இருப்பினும் இருவரும் தமது கெரியரில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இதனிடையே நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”.மஹத்,  சானா கான், நிதின் சத்யா, திவ்ய தர்ஷினி,  பிக்பாஸ் அபிஷேக், பிக்பாஸ் மகேஸ்வரி, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ஆர்.அரவிந்த் எழுதி இயக்கியுள்ளார். 

 இப்படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படக்குழுவினர், பிரத்தியேக பேட்டி அளித்திருந்தனர்.


இதில் பேசிய ரவீந்தர், “மகாலட்சுமியை திருமணம் செய்த பிறகு நடந்த நல்ல விஷயங்களில் ஒன்று, முன்பெல்லாம் திரைப்படங்களை பண்ணுவேன், பணத்தை பார்க்க முடியாது.. இப்போது பணம் பார்க்க முடிகிறது. என்ன இது.. பணமெல்லாம் பார்க்கிறோம் என்று நினைத்தேன். அந்த அளவுக்கு வாழ்க்கை மாறி இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement