கமல்ஹாசன், நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த மாதம் 3ம் திகதி வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்தில் , விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்க்ளுடன் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் வெளியாகிய நாளிலிருந்து ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பையும் பெற்று வருகின்றது. இதனால் கமல் மகிழ்ச்சியடைந்ததோடு படக்குழுவினருக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டி வருகிறார்.
மேலும் படக்குழுவினர் ஒவ்வொருவரும் பல இடங்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர். இவ்வாறு உலகமே இப்பட வெற்றியைக் கொண்டாடி வரும் நிலையில் புஃளு சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் போல பேசி ரோல் செய்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதாவது பழைய விக்ரம் படத்தை உயிரைக் கொடுத்து பண்ணியிருப்பேன். ஆனால் அதை யாரும் தியேட்டரில் வந்து பார்க்கல இப்போ சின்ன பசங்களோட சேர்ந்து மசால படம் பண்ணியிருக்கிறேன். அதை ஓகோ என்று கொண்டாடுறாங்க என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!