தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக இருந்த லட்சுமி, சில நேரங்களில் சில மனிதர்கள், நெற்றிக்கண், தில்லுமுல்லு, விசு இயக்கத்தில் சம்சாரம் அது மின்சாரம் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி, 2009ம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் தென்படாமல் இருந்தார். நீண்ட ஆண்டுகளுக்குபின் அமேசான் பிரைமில் வெளியான ஸ்வீட் காரம் காபி என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் பள்ளியில் படிக்கும் போதே நடிப்பு சரியாக வராது. நாடகத்தில் சரியாக நடிக்க மாட்டேன். ஆனால், நடனம், பாட்டு என்றால் விரும்பி செய்வேன்.
நான் எப்போதும் சிரித்துக்கொண்டுதான் இருப்பேன், எனக்கு அழும் காட்சியை படமாக்கினாலே பிடிக்காது சிரிக்க சொன்னால் நாள் முழுக்க சிரிந்துக்கொண்டே இருப்பேன். வீட்டில் நானும் என் கணவரும் எப்போதும் சிரித்துக்கொண்டே தான் இருப்போம். அவர் விடிய விடிய என்னை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.
திருமணமாகி 37 வருஷம் ஆகி விட்டது, எனக்கும் என் கணவருக்கும் இதுவரை சண்டையே வந்தது இல்லை. பல விஷயங்கள் குறித்து இருவரும் கலந்து பேசித்தான் முடிவு எடுப்போம். எனக்கு சினிமா பற்றியும் மற்ற விஷயங்கள் பற்றியும் ஓரளவுக்கு புரிதல் இருக்கிறது என்றால் அது அவரால் தான். அவர் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டே இருப்பார். என்னையும் அந்த புத்தகம் படி என்று சொல்லுவார் என்று தனது கணவர் சிவச்சந்திரன் குறித்து பல விஷயங்களை லட்சுமி அந்த பேட்டியில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!