தென்னிந்திய சினிமாவில் பிரபல்யமான நடிகையாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 4 மாதங்களாக அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். புத்தாண்டுக்கு பின்னர் தான் புத்துணர்ச்சி உடன் தனது பணிகளை மீண்டும் செய்யத் தொடங்கி உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்திற்கு ஸ்டைலாக வந்திருந்த சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.இந்நிலையில், இன்று சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள புராண கதையம்சம் கொண்ட சாகுந்தலம் என்கிற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில் சமந்தாவும் கலந்துகொண்டார். நடிகை சமந்தா நீண்ட இடைவெளிக்கு பின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இது என்பதால், அவர் நிகழ்ச்சிக்கு வந்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து இந்நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் இயக்குநர் குணசேகர், இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என பாராட்டி பேசினார். அவரின் பேச்சைக் கேட்டதும் எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார். சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றதாகவும், இறுதியில் தயாரிப்பாளர் நீலிமா தான் சமந்தாவை பரிந்துரை செய்ததாக குணசேகர் தெரிவித்தார்.
பின்னர் சமந்தா பேசியபோது, “இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை” என பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!