• Nov 19 2024

நான் ஒன்னும் மேஞ்சிவிட்ட மாடு கிடையாது... ஓவர் ரியாக்ட் செய்த மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய ஏடிகே..!- நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்பொழுது 33 நாட்கள் ஆகி விட்டது.இந்த வாரம் பிக்பாஸால் கொடுக்கப்பட்ட பேக்கரி டாஸ்க்கினால் போட்டியாளர்களுக்கிடையில் மோதலுக்கு குறைவில்லாமல் அடிக்க சண்டை ஏற்பட்டு வருவதைக் காணலாம். பேக்கரி டாஸ்க்கினால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்றும் 'அட தேனடை' என்றும் இரண்டு அணியாக பிரிந்து விளையாடி வருகிறார்கள்.அந்த வகையில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

அதாவது அமுதவாணன் மணிகண்டன் தன்னை இழுத்துப் பிடித்து அடித்ததாக வாக்குவாதம் செய்ததோடு அழுது கொண்டிருந்தார். இதனால் அங்கு வந்த மணி கண்டன் நான் வேணும் என்றெல்லாம் அப்படிப்பண்ணல கேமுக்காகத் தான் இப்படிப் பண்ணினேன் வேணும் என்று செய்ததாக சொல்லாதடா என சின்ன வாக்கு வாதம் இடம் பெற்றது.


தொடர்ந்து  இந்த வாரத்தின் வேஸ்ட் பொஃபோமர் யார் என்று கேட்ட போது விக்ரமன் எழுந்து ஜனனியின் பெயரைக் கூறினார். இதனால் அமுதவாணன் ஏன் என்று கேட்க அவர்களுக்குள்ளே சிறிய வாக்குவாதம் ஏற்படுகின்றது. இதனால் எரிச்சலடைந்த ஜனனி வாக்குவாதம் வேண்டாம் என பெரிதாக கத்தி அழுதார். இவரை ஆயிஷா ரச்சிதா ஆகியோர் சமாதானம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏடிகே ஜனனியின் பெயரைக் கூறி சமாதானப்படுத்திக் கொண்டிருக்க ஓவர் ரியாக்ட் செய்த மகேஸ்வரியை பார்த்து நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள், அப்படி செய்வது இரிடேட்  ஆவதாக அவர் கூற அதற்கு மகேஸ்வரி என்னுடைய இஷ்டம் என ஏடிகே விடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது நீங்கள் என்ன சொன்னாலும் வாங்கிட்டு போக நான் ஒன்னும் மேஞ்சிவிட்ட மாடு கிடையாது என ஆக்ரோஷமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார்.


பின்னர் நல்ல போட்டியாளராக ரச்சிதாவைத் தேர்வு செய்தனர். இதனால் அவர் அடுத்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார். மேலும் இதில் அதிக பணத்தினை சேர்த்து வைத்து 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'டீம் வெற்றி பெற்றது.அதே போல அசீமுக்கு லட்ஜரி பட்ஜெட் டாஸ்க்காக 25 முறை நீச்சல் தடாகத்தில் குதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதனை அசீம் சிறப்பாக செய்தார். பின்னர் ஹவுஸ்மேட் தமக்குள் பேசிட்டு இருக்கும் போது இந்த வார எப்பிஷோட்டானது முடிவுக்கு வந்தது.


Advertisement

Advertisement