• Nov 17 2024

ஸ்கீரின் ஷாட் எடுத்து வைத்துள்ளேன்- நெட்டிசன்களை அலறவிட்ட துல்கர் சல்மான்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் இந்தியில் 'சுப்' என்ற படத்தில் நடித்துள்ளார்.சுப் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், நெட்டிசன்கள் குறித்து கோபமாக  விமர்சித்துள்ளார்.

மலையாள முக்கிய நடிகராக  திகழ்பவர் தான் துல்கர் சல்மான்.இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 95 கோடி ரூபாய் வசூலித்துள்ள இந்தப் படம், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி, ஓடிடி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. ஓடிடியில் வெளியான போதும் சீதா ராமம் திரைப்படம் இப்போது வரை திரையரங்குகளிலும் ஓடி வருகின்றது.

இந்நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து 'சுப்' திரைப்படம் வெளியாகவுள்ளது. அத்தோடு முன்னணி இயக்குநரான பால்கியின் படைப்பான சுப் திரைப்படம், சைக்கோ திரில்லர் ஜானரில் மிரட்டலாக உருவாகியுள்ளது. ஏற்கனவே சீனி கம், பா, ஷமிதாப், கி & கா, பேட் மேன் என தரமான படங்களை இயக்கியுள்ள பால்கியுடன் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ளார் துல்கர் சல்மான். மேலும் இந்தப் படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்தி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'சுப்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் துல்கர் சல்மான் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், இந்தப் படம் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளரிடம் அவர் கொடுத்த பேட்டியில், சோஷியல் மீடியாக்களில் விமர்சிப்பவர்கள் குறித்து காட்டமாக பதிலளித்துள்ளார்.

எனினும்  சமீப நாட்களாக முன்னணி நடிகர்கள் குறிவைத்து ட்ரோல் செய்யப்படுகின்றனர். மேலும், அவர்களுக்கு எதிராக பாய்காட் பதிவுகளும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால், சில பெரிய பட்ஜெட் படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்தன.

இந்நிலையில், பத்திரிகையாளரிடம் பேசிய துல்கர் சல்மான், "சமூக வலைத்தளங்களில் வெளியான என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை ஸ்கீரின் ஷாட் எடுத்து வைத்துள்ளேன். அந்தப் பதிவுகளை ஷேர் செய்தவர்களின் ஐடிக்கள் கூட எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.அத்தோடு  நடிகர்கள் மீதான விமர்சனங்கள் புதிது அல்ல. ஆனால், பலர் வரம்பு மீறி போகின்றனர். நடிகர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும் ட்ரோல் செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் விமர்சனங்கள் சினிமாவுக்கு அப்பாற்பட்டவை" எனக் கூறியுள்ளார். துல்கர் சல்மானின் இந்த காட்டமான பேச்சு, நெட்டிசன்களை அலறவிட்டுள்ளது.

Advertisement

Advertisement