• Nov 10 2024

"நான் படிக்கல ஆனால் இன்னைக்கு 'The Elephant Whisperers' படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைச்சிருக்கு".. எமோஷனாலாக பேசிய பெண் யானைப் பாகன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை  இந்தியாவின் The Elephant Whisperers என்ற படம் வென்றுள்ளது. அதாவது இந்த பிரிவில் The Elephant Whisperers, Haulout, How Do You Measure a Year?, The Martha Mitchell Effect, Stranger at the Gate என 5 படங்கள் போட்டியிட்ட நிலையில் ஆஸ்கர் விருது 'The Elephant Whisperers' படத்துக்கு கிடைத்துள்ளது. 

யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டியானைகளின் வாழ்வியலையும், இத்தகைய யானைகளை பரமாரிக்கும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமின் தம்பதிகளின் வாழ்க்கையையும் இப்படம் ஆனது மிகவும் தத்ரூபமாக காட்டியிருந்தது. 


அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்கிற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்து தவித்த அம்முக்குட்டி என்கிற பொம்மி யானையும் முதுமலை வளர்ப்பு முகாமுக்கு கொண்டுவரப்பட்டு, அதனை பராமரிக்கும் பொறுப்பு பொம்மன் - பெள்ளி என்ற பாகன் தம்பதிகளிடம் வனத்துறை ஒப்படைத்தது. 

இந்த இரு யானைகளையும் தங்களது பிள்ளைகள் போல் வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து தான்  'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்கிற ஆவண குறும்படம் எடுக்கப்பட்டது


இந்நிலையில் தற்போது பெள்ளி அது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "யானைகளை வளர்க்க அரசாங்கம் எனக்கு நல்ல உதவியாக இருந்தது. மருந்து கொடுத்து எல்லாம் உதவி பண்ணி இருக்காங்க. குட்டிகளை வளர்க்கும் வரைக்கும் நல்ல துணையாக இருந்தாங்க. அதனால நான் வளர்த்து பெரிசாக்கிட்டேன்.

ஒரு பிள்ளை வந்தான். அவன் வந்து documents எடுத்தான். government இல் ஆர்டர் கொடுத்ததால் நான் வந்து எடுத்தேன் என்று அவன் கூறும் போது நான் என்ன வேணாம் என்றா சொல்ல முடியும். 

உடனே அவங்க நான் குட்டி மேய்க்கிற மாதிரியும், குட்டி என்கிட்ட பழகிற மாதிரியும் எடுத்திட்டாங்க. எடுத்து இப்போ அவார்ட் வரைக்கும் போய்டிச்சு government க்கு சந்தோஷம். முதுமலைக்கு சந்தோஷம். எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம் தான். ஏனென்றால் நான் படிக்கல, நான் படிக்காமல் இருந்தாலும் என் குட்டிக்கு தான் அவங்க தாங்ஸ் சொல்லணும். எனக்கில்லை" என ரொம்ப எமோஷனலாக பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாது "2குட்டியையும் நிக்க வச்சு எனக்கு தாங்ஸ் சொல்லி இருந்தால் நான் எவ்ளோ சந்தோசப்பட்டிருப்பேன். நான் தனியாக நின்று சொல்லும் போது எனக்கு குட்டி ஞாபகம் தான் வரும்" எனவும் கூறி உள்ளார் அந்த பெண் யானைப் பாகனான பெள்ளி.

Advertisement

Advertisement