• Nov 10 2024

நடிகைக்கு 45 நிமிஷம் முத்தம் கொடுத்தேன்- சலித்த போய்விட்டது- உண்மையை உளறிய நடிகர் அப்பாஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் chocolate boyஆக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் காதல் தேசம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.மிர்சா அப்பாஸ் அலி என்ற முழுப்பெயர் கொண்ட அப்பாஸ், கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் என்பதும் முக்கியமாகும்.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் சில மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்திலும் நடித்து உள்ளார். தமிழில் விஐபி, பூச்சூடவா, ஜாலி. கமலுடன் ஹேராம், பம்மல் கே சம்மந்தம், ரஜினியுடன் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.


அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த அப்பாஸ் நான் பொருளாதார ரீதியாக நலிவடைந்தேன். வாடகை கொடுக்க பணம் இல்லை. எனக்கிருக்கும் பிரபலத்தால் தொடக்கத்தில் வேலை தேடிச் செல்ல முடியவில்லை. கடைசியில் சலித்துப் போய் சினிமாவை விட்டு விலகிவிட்டேன்.

நான் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியிருந்தது. அதனால் நியூசிலாந்து சென்றேன். அங்கு மெக்கானிக்காக பணிபுரிந்தேன். டெக்ஸி ஓட்டினேன் என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில்  அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அப்பாஸ் அவரின் காதலிகள் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு பெண்ணை 45 நிமிடம் முத்தம் கொடுத்து இருக்கிறேன்.இந்தி மியூசிக் வீடியோ பண்ணும்போதும் ஒரு முத்த காட்சியில் நடித்தேன். கிட்டதட்ட 4 கோணங்களில் காட்சியை படமாக்கினார்கள். ஒரு கட்டத்தில் எனக்கும் அந்த நடிகைக்கும் முத்தக் காட்சி போர் அடித்து விட்டது என்று அப்பாஸ் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   


Advertisement

Advertisement