• Sep 20 2024

இரவு 1 மணிக்கு போய் பண்ணிட்டு அம்மா கிட்ட பொய் சொன்னேன்- சிறகடிக்க ஆசை சீரியல் முத்து சொன்ன ரகசிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இதிலும் முத்து செய்யும் சேட்டைகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

அதில் முத்து என்னும் காரெக்டரில் வெற்றி என்பவர் நடித்து வருகின்றார். இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் நீங்க சிங்கிளா என்று கேட்ட போது நான் இன்னும் திருமணம் முடிக்காத சிங்கிளாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் நான் எங்க அம்மா கிட்ட நிறைய டைம் பொய் சொல்லி இருக்கிறேன். அதில முக்கியமானது என்ன என்றால் நானும் என்னோட ப்ரெண்ட்டும் இரவு 1 மணிக்கு போய் மாட்டிறைச்சி பிரியாணி வாங்கி சாப்பிட்டோம்,ஆனால் வீட்டுக்கு வந்து குஜ்கா சாப்பிட்டோம் என்று பொய் சொன்னோம் என்று கூறியுள்ளார்.


மேலும் சிறகடிக்க ஆசை சீரியலில் நான் ஒரு ட்ரைவர். சாதாரணமாக ஒரு ட்ரைவர் எப்படி இருக்கின்றாரோ அதே வேலையைத் தான் நானும் பண்ணிட்டு இருக்கிறேன்.இந்த சீரியல் மூலம் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கு என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement