தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் 5 இல் போட்டியாளராகப் பங்கு கொண்ட பிரபல்யமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி.
அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பாவனி பங்கு கொண்டார் . ஆனால் வைல்ட் காட் என்ரியாகத் தான் அமீர் கலந்து கொண்டார். இருப்பினும் நிகழ்ச்சியின் போதே நெருக்கம் காட்டி வந்த அவர்கள் இருவரும் பிக்பாஸ் முடித்து வெளியே வந்தும் கூட ஒன்றாக சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் ஜோடியாக BB ஜோடிகள் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இப்பொழுது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கேள்விக்கு பதிலளிக்கும் படி டாஸ்க் வைத்துள்ளனர். அதில் பாவனி "எனக்கு அமீர் பிடிக்கும், ஆனால் கொஞ்சம் டைம் வேணும்" என பேசியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!