• Sep 20 2024

'விஜய்யின் அந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்'...பாராட்டிய அஜித்..எந்த பாடல் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். என்னதான் இப்படத்தின் டைட்டிலுக்கு பல கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அஜித்திற்கு ஏற்ற டைட்டிலாக தான் இருக்கின்றது என்பதே பலரது கருத்தாக இருக்கின்றது. 

 இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் படக்குழு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் நேரடியாக மோதியதால் ரசிகர்கள் முதல் கோலிவுட் வட்டாரம் வரை அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். 

 இந்நிலையில் தற்போது இந்த மோதலை தடுக்கும் வகையில் ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.பிரபல பாடகி சுசித்ரா சொன்ன ஒரு தகவல் தான் தற்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் மோதலை குறைத்துள்ளது.

அதாவது சுசித்ராவை ஒரு பார்ட்டியில் பார்த்த அஜித் அவரிடம் , நீங்க பாடிய பாடலிலேயே விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற சின்ன தாமரை பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அது எப்படி விஜய்க்கு மட்டும் நல்ல நல்ல பாட்ட அமையுதுன்னு தெரியலே என ஓப்பனாக அஜித் பேசினாராம். 

இப்படி ஒரு போட்டி நடிகரின் படத்தின் பாடல்களை அஜித் பாராட்டிய தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. என்னதான் இவர்களுக்குள் போட்டி இருந்தாலும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர் என சிலர் கருத்து சொல்ல, இந்த வீடீயோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement