• Nov 19 2024

இந்த புடவையில் எனது அம்மா போல இருக்கின்றது- அனுபாமா பரமேஸ்வரன் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த 'பிரேமம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் இதனைத் தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் படவாய்ப்புக்கள் குவிந்ததால் அங்கே கவனம் செலுத்த ஆரம்பித்தார். தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.கடைசியாக அனுபமா அதர்வாவுடன் இணைந்து‘தள்ளி போகாதே’ என்னும் படத்தில் நடித்திருந்தார்.

இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான போட்டோக்களையும் பதிவிட்டு வருவார்.லாக் டவுன் சமயத்தில் படு மாடர்ன் உடைகளில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

மேலும் தெலுங்கில் வரும் ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் ரிலீசாகும் கார்த்திகேயா -2 படத்தின் ரிலீஸை ஒட்டி அவ்வப்போது ப்ரோமோஷன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் & வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.இந்நிலையில் கார்த்திகேயா -2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது உடுத்திய பட்டுப்புடவையில் சில புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம்‌ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்களுக்கு "இந்த புடவையில் எனது அம்மா போல இருப்பதாக தோன்றுகிறது" என்று கூறியுள்ளார் இதற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement