தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்ஷிகா தற்போது திருமண பந்தத்தில் இணைந்து விட்டார். அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ஆம் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னரும், மற்றும் தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.
இருப்பினும் ஹன்சிகா அன்றிலிருந்து இன்றுவரை சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி பதிவுகளையிட்ட வண்ணமே இருந்து வருகின்றார். அந்தவகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றும் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் பதிவுகளில் தான் எப்படி இருப்பதாகவும், நிஜத்தில் எப்படி இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் இவர் இன்ஸ்டாவில் ஸ்டைலாக இருப்பதாகவும், நிஜத்தில் நிறைய சூட்கேஸ், பாக்- களை சுமந்து கொண்டு சுமையோடு வரும் ஒருவராகவும் பதிவிட்டிருக்கின்றார்.
இதோ அந்தப் பதிவு..!
Listen News!