• Nov 11 2024

“நான் இந்த நடிகைரை தான் லவ் பண்ணுறேன்”...மனம் திறந்த நடிகை சமந்தா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மளமளவென வளர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். இவர் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தான் அதிகமாக நடித்து வருகின்றார்.

இவர் நடிப்பில் சாகுந்தலம் உருவாகி வரும் நிலையில் குஷி படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகின்றது.


பாலிவுட்டில் பிஷியான நடிகையாக திகழும் இவர் தற்போது 4 படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

அதில், முதலாக ராஜ் மற்றும் டி.கே இணைந்து இயக்கும் சிடேட்டால் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸுக்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் இவர் சில வருடங்களுக்கு முதல் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.அதாவது தான் முதலில் பார்த்த தமிழ் படம் “காக்க காக்க..” என்று கூறியுள்ளார்.

அத்தோடு நான் விஜய் சேதுபதியை ரொம்ப லவ் பண்றேன்.அவர் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவருடைய பீசா படத்தின் போது அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது என மனம் திறந்து பேசியுள்ளார் சமந்தா.


Advertisement

Advertisement