• Sep 20 2024

உங்க இருவரையும் ரொம்ப காதலிக்கின்றேன்- குக்வித் கோமாளி ஷோ குறித்து நடிகை ஸ்ருதி போட்ட உருக்கமான பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.அதன் படி இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் செமி பைனல் சுற்று நடைபெற்றது. இதில், டிக்கெட் டு பினாலே சுற்றில் விசித்திரா நேரடியாக பைனலிஸ்ட் ஆகிவிட்ட நிலையில்,நேற்றைய எபிசோடில் செமி பைனல் சுற்றில் கிரண், மைம் கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதில், இரண்டாவது பைனலிஸ்ட்டாக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தொடர்ந்து சிவாங்கி மூன்றாவது மற்றும் ஸ்ருஷ்டி நான்காவது பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத கிரண் ஐந்தாவது பைனலிஸ்ட்டாக கிரண் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் ஐந்து போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடங்கத்தில் இருந்து ஆர்வமுடன் கலந்து கொண்ட ஸ்ருஷ்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேங்க்யூ மோனி மற்றும் தங்கதுரை உங்கள் இரண்டு பேரையும் நான் மிகவும் காதலிக்கிறேன். நான் மோனியுடன் அதிகமாக சமைத்தது இல்லை. நிகழ்ச்சி முடிவதற்குள் அவருடன் இணைந்து சமைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.


இறுதியாக நான் மோனியுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. மெயின் டாஸ்கின் போது மோனி கை நடுங்கியதை நான் பார்த்தேன், அவ்வளவு பயம் இருந்தது அவளுக்கு. தங்கதுரை என் அருகில் நின்று ஊக்கப்படுத்தி கொண்டே இருந்தார். ரொம்ப அழுத்தமாக இருந்த நேரத்தில், தங்கதுரை ஜோக் தான் ரொம்ப ஆறுதலாக இருந்தது.நான் வென்ற போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். இவை எல்லாத்திற்கும் காரணம் மோனி மற்றும் தங்கதுரைதான் என உருக்கமாக பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement