• Sep 20 2024

ரொம்ப மிஸ் பண்ணுறேன்,என் ரோஜா நீயே- சமந்தாவுடன் வீடியோ காலில் பேசிய விஜய் தேவர்கொண்டா- வெளியாகிய ரொமாண்டிக் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கின் பிரம்மாண்ட படத்தயாரிப்பு நிறுவனமான மைதிரி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் குஷி. விஜய் தேவரகொண்ட - சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் இவர்களுடன்  ஜெயராம், முரளி ஷர்மா, லக்‌ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, சரண்யா பிரதீப் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் செப்டெம்பர் மாதம் 1ம் தேதி வெளியாகவுள்ளது.காதல் மற்றும் திருமணம் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி தான் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


மற்றும் படத்தின் ரிலீஸிற்காக ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா சமந்தாவுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அத்தோடு சமந்தாவை மிஸ் பண்ணுவதாகவும் கூறியதோடு என்ரோஜா நீயே பாடலை சமந்தாவுக்காக பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement