சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக ரசிகர்களால் அறியப்பட்டு பின்னர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளவர் மதுரை முத்து. சன் டிவி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வந்த 'அசத்தப்போவது யாரு' என்கிற ரியாலிட்டி காமெடி ஷோ மூலம் தன்னுடைய காமெடியான பேச்சால் ரசிகர்களை கவர்ந்த, மதுரை முத்துவுக்கு வெளிநாடுகளில் கூட பல ரசிகர்கள் உள்ளனர்.
இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சமையல் நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்து தன்னுடைய பழைய காமெடியால், மொக்கை வாங்கினாலும் அதனை டேக் இட் ஈஸி போல் எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார்.
இந்நிலையில் தனக்கு வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் ஷங்கர் கொடுத்த இரு வாய்ப்புகளை இழந்தது மிகவும் வருத்தமான ஒன்று என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'ஆடுகளம்'. 6 பிரிவுகளின் கீழ் தேசிய விருதை வென்றது இந்த படத்தின் ஒரு முக்கிய பணிக்காக தான் இயக்குநர் வெற்றிமாறன் மதுரை முத்துவை அணுகியுள்ளார்.
ஆடுகளம் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, தன்னுடைய துணை இயக்குநர் துரை செந்தில்குமார் மூலம், மதுரை முத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில், மதுரை முத்துவும் அவரை சென்று சந்தித்துள்ளார். அப்போது வெற்றிமாறன் பெரிய பைல் ஒன்றை கொடுத்து... அதில் இருக்கும் வசனங்களை மதுரை பாஷையில் மாற்றிக் கொடுக்க கூறியுள்ளார். ஆனால் அப்போது ஒரு சில காரணங்களால் இந்த வேலையை செய்ய மறுத்து விட்டாராம் மதுரை முத்து.
இதைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர், தளபதி விஜய்யை வைத்து இயக்கிய நண்பன் படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு விடுத்த நிலையில், வெளிநாட்டில் காமெடி நிகழ்ச்சி ஒன்று புக் ஆகி இருந்ததால், அந்த வாய்ப்பையும் இழந்து விட்டதாக மிகவும் வருத்தத்தோடு கூறியுள்ளார்.
Listen News!