சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் ’குசேலன், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருப்பார்.
இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் நடிகை மம்தா மோகன்தாசும் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாக இருந்தார்.
ஆனால் இந்த படத்தில் இன்னொரு ஹீரோயின் தேவையில்லை என்று நயன்தாரா பட குழுவினர்களிடம் கூறியதால் தான் நான் அந்த படத்தில் நீக்கப்பட்டேன் என நடிகை மம்தா மோகன்தாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அதேபோல் அனுஷ்கா நடித்த ’அருந்ததி’ திரைப்படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது என்றும் ஆனால் தெலுங்கு திரை உலகிற்கு நான் புதிது என்பதால் அந்த படத்தில் நடிக்க நான் பயந்தேன் என்றும் ஒரு அருமையான படத்தை மிஸ் செய்து விட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!