தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்த நடிகைகளில் பலர் தற்பொழுது நடிப்பதை நிறுத்தி விட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சில நடிகைகளுக்கு திரைப்பட படவாய்ப்புக்கள் கிடைக்காததால் கவர்ச்சியான போட்டோ ஷுட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் குறைந்த அளவே படங்கள் நடித்து இருந்தாலும், ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் நடிகை நிலா. அவரது நிஜ பெயர் மீரா சோப்ரா. அவர் எஸ்ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார்.
அதன் பின் மருதமலை, ஜம்பவான், லீ, காளை, ஜகன்மோகினி, இசை, கில்லாடி உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார்.
அது மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற மொழி படங்களிலும் அவர் அதிகம் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் திருமணத்திற்கு தயாராகி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அவரது திருமணம் குறித்த அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!