மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டா மணிக்கு பண உதவி செய்திருக்கிறார் நடிகர் தனுஷ். இதனையடுத்து அவருக்கு வீடியோ மூலமாக நன்றி கூறியுள்ளார் நடிகர் போண்டாமணி.
நகைச்சுவை நடிகரான போண்டா மணி இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்.இவர் 1991-ம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் நுழைந்தார் மணி. மேலும் அது துவங்கி பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக மணி நடித்திருக்கிறார்.எனினும் குறிப்பாக 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களின் மூலம் இவர் ரசிகர்களிடத்தே பிரபலமானார்.
இவ்வாறுஇருக்கையில் , உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மணி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து விட்டதால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இதனையடுத்து மணியின் நண்பரும் நகைச்சுவை நடிகருமான பெஞ்சமின் கண்ணீர் வடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.அத்தோடு அதில்,"'அன்பு அண்ணன், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் மேல் சிகிச்சைக்கு உதவும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், போண்டா மணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில்,"தம்பி தனுஷ் நீங்க அனுப்பிய ஒரு லட்ச ரூபாய் கவர் கிடைத்தது. இந்த சூழ்நிலையில நீங்க அனுப்பிய பணம் பெரிய உதவியா இருக்கு. என்னுடைய சார்பிலும் என் குடும்பத்தின் சார்பிலும் உங்களுக்கு நன்றியை தெரிவிச்சுக்குறேன். இப்படி ஒரு சூழ்நிலைல நீங்களாம் ஹெல்ப் பண்றது ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு நன்றி" என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நடிகர் போண்டா மணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிகிச்சைக்கான முழு செலவும் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்க விடயம்.
Listen News!