• Nov 19 2024

“துணிவு-ல வில்லனா நடிச்சிருக்க வேண்டியது”- வாரிசு-ல தான் நடிக்க வாய்ப்பு கிடைச்சிச்சு- மனம் திறந்து பேசிய நடிகர் ஷ்யாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்.இவர் நடித்து வாரிசு திரைப்படம் அடுத்த திரைப்படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார்.இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

மேலும்,இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக  ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.இவருடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, யோகிபாபு, ஷ்யாம், சங்கீதா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து வருகின்றனர்.


இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் இரண்டு சிங்கிள்களான 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி'ஆகிய பாடல்களும் ரிலீஸாகி செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், துணிவு படத்தில் தனக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது பற்றி நடிகர் ஷ்யாம் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.அதில் வாரிசு திரைப்படம் குறித்தும், நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதே போல துணிவு படத்தில் தனக்கு நடிக்க வந்த வாய்ப்பு குறித்து பேசிய ஷ்யாம் "துணிவு படத்தில் Antagonist ஆக நான் தான் நடிக்க வேண்டியது.தளபதி 66 படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் ஆகி,அட்வான்ஸ் வாங்கிய பிறகு ஒரு தேதி லிஸ்ட் எனக்கு அனுப்பினாங்க. திடீர்னு பார்த்தா ஒரு பத்து நாள் இல்லனா ஒரு வாரத்துல வினோத் சார் ஃபோன் பண்ணி,'ஷ்யாம் சார், துணிவு படத்துல நீங்க வில்லனா நடிக்கணும் நான் விரும்புறேன்'அப்படின்னு சொன்னாரு.பயங்கரமா Excited ஆயிட்டேன். என்னடா, நடந்தா இப்படி நடக்குமா?.அங்க ஒண்ணு, இங்க ஒண்ணு அப்படின்ற மாதிரி.


அஜித் சார் படம் நான் பண்றேன்னு சொல்லி,தளபதி 66 கமிட் ஆயிட்டேன்ங்குறதுனால தேதி எப்போன்னு கேட்டேன். அப்படியே அச்சு அடிச்ச மாதிரி அதே தேதி சொல்றாங்க. கரெக்டா அவங்களும் துணிவு படத்துக்காகவும் செட் போட்டாங்க. நானும் தளபதி 66 நடிக்க ஆரம்பிச்சிட்டேன். 6 மாசத்துல இதே லுக் தான் மெயின்டைன் பண்ணும் அப்படிங்குறதுனால பண்ண முடியல. ரொம்ப பீல் பண்ணேன், அஜித் சாரோட படத்துல சந்தர்ப்பம் அப்படின்னு. ஆனா வினோத் சார் வந்து பரவால்ல விடுங்க சார் அடுத்தவாட்டி ஜாயின் பண்ணிக்கலாம்னு சொன்னார்" என ஷ்யாம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement