விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்து 60 நாட்களைக் கடந்துள்ள நிலையில் கடந்த வார இறுதியில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் எலிமினேட் ஆகி இருந்தனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியான ராம், பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்தும், தனது கேம் குறித்தும் பல சுவாரஸ்ய கருத்துக்களை ராம் பகிர்ந்து கொண்டுள்ளார். பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமியிடம் தள்ளி விட மாட்டேன் என எச்சரித்தது தொடர்பாக சில கருத்துக்களை ராம் குறிப்பிட்டு இருந்தார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் Gender Equality இருப்பதாக பேசிய ராம், பொம்மை டாஸ்க்கில் நடந்த சம்பவம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது "என்னோட உயரத்துக்கும், வெயிட்டுக்கும் அவங்களோட உயரத்துக்கும், வெயிட்டுக்கும் கண்டிப்பா என்னோட பவர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். நம்மள படைச்ச விதம் அப்படி. மனசு அளவுலயும், உடல் அளவுலயும் தனலட்சுமி ரொம்ப வலிமையானவங்க தான். ஆனா அந்த பொம்மை டாஸ்க்ல கதவுக்கு முன்னாடி நின்ன தனலட்சுமி, எல்லாரையும் கைய புடிச்சு தள்ளிட்டு இருந்தாங்க.
அப்ப நான், அவங்க கிட்ட 'இத எனக்கு பண்றதுக்கு டைம் ஆகாது. ஆனால் அத பண்ண மாட்டேன். ஏனென்றால் என் வீட்டுல, பொண்ணுங்கள அப்படி ட்ரீட் பண்ணனும்னு சொல்லி வளர்க்கல. அதனால நான் அப்படி பண்ண மாட்டேன். இத அட்வான்டேஜா எடுத்துக்காத'ன்னு தனாகிட்ட சொன்னேன்.இதே நான் ஒரு பொண்ண தள்ளிவிட்டிருந்தா கண்டிப்பா அது தப்பா இருக்கும். என்னா ஒரு பொண்ண நம்ம பிஸிக்கலா வேதனைப்படுத்தவே கூடாது.
Listen News!