• Sep 20 2024

நான் முறைத்துப் பார்த்தேன் அவன் ஓடி விட்டான்- நடிகர் சிவா குறித்து பேசிய இயக்குநர் மிஸ்கின்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடித் திரைப்படங்களைத் தெர்ந்தெடுத்து நடித்து வரும் முக்கிய நடிகர் தான் மிர்ச்சி சிவா. இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

இவரது வட சென்னை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் தான் பேப்பர் ராக்கெட். கிருத்திகா இயக்கத்தில் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளியாகவுள்ள இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அதில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் “நான் சிம்புவோடு சேர்ந்து படம் பண்ணலாம் என இப்போதுதான் பேசிக் கொண்டு இருந்தேன்.

ஒரு பார்ட்டியில் இரவு 12 மணிக்கு சிவா என்னிடம் வந்து ‘சார் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஜோக் படம் பண்ணலாம் சார்னு சொன்னான்’ நான் அவனை முறைத்துப் பார்த்தேன். அப்படியே ஓடிவிட்டான்’ என கலகலப்பாக பேசினார்.நிகழ்வில் சிம்பு, மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement