• Nov 10 2024

பிரதாப் போத்தன் கொடுத்த செயின் என் கழுத்துல இப்போவும் இருக்கு-பிரபல நடிகர் உருக்கமான கதை…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 1979 ஆம் ஆண்டு இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தில் மூலம் அறிமுகமாகியவர் தான் பிரதாப் போத்தன். இதனைத் தொடர்ந்து மூடுபனி, வறுமையின் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களையும் சேர்த்து 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இது தவிர சீவலப்பேரி பாண்டி, ஜீவா, வெற்றி விழா உள்ளிட்ட தமிழ் படங்களையும் இயக்கியும் உள்ளார்.

70வது வயதை அடைந்த இவர் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1988ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த ஜீவா படத்தை பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். அப்போதைய காலகட்டத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.மேலும் இந்த நிலையில், பிரதாப் போத்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சத்யராஜ், ஊடகத்தினரை சந்தித்து பேசியபோது மனமுடைந்து அழுதார்.

மேலும் அவர் பிரதாப் போத்தன் குறித்து கூறுகையில், 'என்னுடைய மிக நெருங்கிய நண்பர், அருமையான நடிகர் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன். எப்போதும் சிரித்துக்கொண்டே கலகலப்பாக இருக்கும் நபர். பத்து நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசினார்.

என்னை உரிமையாக யாராவது கிண்டல் செய்தால், திட்டினால் எனக்கு பிடிக்கும். அதில் ஒருவர் பிரதாப். ஜீவா படத்தின் படப்பிடிப்பில் அவர் அன்பளிப்பாக கொடுத்த செயின் தான் இது. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்' என குறிப்பிட்டார்.மேலும் அவரே வெளியிட்ட வீடியோ ஒன்றில், 'பிரதாப் போத்தனுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. குழந்தை போன்ற மனசு அவருக்கு. திடீரென இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கலைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறியிருந்தார்.1992ஆம் ஆண்டு சத்யராஜை வைத்து மகுடம் என்ற படத்தையும் பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement