• Nov 14 2024

“நான், ஆரம்பத்தில் நடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன்” - திரைதுறையில் தனது கடந்தகால அனுபவங்களை பகிர்ந்த பாக்கியராஜ்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்ட படங்களை இயக்குவதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் பாக்கியராஜ். இவர் தன்னுடைய படங்களில் மட்டுமல்லாது பிற இயக்குநர்களின் பட விழாக்களிலும் கலந்து கொண்டு பல கருத்துக்களை கூறி வருகின்றார்.


அந்தவகையில் தற்போது மித்ரன் ஜவஹர் 'அரியவன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் கதாநாயகனாக ஈஷானும், கதாநாயகியாக பிரணாஸியும் நடித்துள்ளனர். இந்த பட விழா நிகழ்ச்சியில் டைரக்டரும், நடிகருமான பாக்யராஜ் கலந்து கொண்டு பேசும் போது தனது கடந்த காலத்து சினிமா அனுபவங்களை பகிர்ந்தார். 

அவர் கூறுகையில் "நான் சினிமாவில் நடிக்க வந்தபோது கதாநாயகனுக்கு தேவையான பயிற்சி எதுவுமே எடுக்கவில்லை. பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோரும் என்னைப் போன்று பயிற்சி எடுத்துக் கொள்ளாமல்தான் நடிகர்களாக ஆனார்கள்" எனத் தெரிவித்தார்.


மேலும் "நாங்கள் நடிகரான பிறகுதான் நடிப்பு சம்பந்தமான நிறைய விஷயங்களை கற்றோம். ஆனால் இந்த படத்தின் கதாநாயகன் ஈஷான் நடிப்பு பயிற்சி, கராத்தே பயிற்சி போன்றவற்றை எடுத்துக்கொண்டு நடிக்க வந்து இருக்கிறார்" எனக் கிண்டலாக கூறி இருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது "நான் கதாநாயகனாக அறிமுகமான காலத்தில் தினமும் அதிகாலையில் எழுந்து சேவிங் செய்ய வேண்டும். ஆனால் இப்போதுள்ள கதாநாயகர்கள் பலரும் தாடியுடன் இருக்கிறார்கள். நான் ஆரம்பத்தில் வான் மேகங்களே என்ற பாடல் காட்சியில் நடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால் இப்போது உதடு அசைவுகள் பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை" எனவும் கூறியுள்ளார்.


அத்தோடு இறுதியாக "சினிமாவில் நல்ல கருத்தை சொல்ல வேண்டும். இந்த படத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், தண்டனைகளையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சொல்லி இருக்கிறார்கள், படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்'' எனவும் கூறி முடித்திருக்கின்றார் பாக்கியராஜ்.

Advertisement

Advertisement