• Nov 19 2024

விஜய் கண்டிப்பா அவுட் என்று தான் நினைக்கிறேன்- திமிராகப் பேசிய பிக்பாஸ் அபிஷேக்- கடும் கோபத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள் தான் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கென்று தனியாக ரசிகர் பட்டாளம் இருப்பதோடு இவர்கள் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பொதுவாகவே சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதோடு வசூலிலும் அள்ளிக் குவித்து விடுவதுண்டு.

அந்த வகையில் தற்பொழுது அஜித் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த இரண்டு படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.


இதனால் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.அத்தோடு யாருடைய படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்கும் என்ற விடயங்கள் விரைவில் வெளியாகும். அத்தோடு இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலமும் தொகுப்பாளருமான அபிஷேக் இந்த விடயம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதாவது என்னையறித்தால் படத்தின் ட்ரெய்லர் வெளியான போது விஜய் அவுட் என்று நினைத்தேன். கத்தி படத்திற்குப் பிறகு விஜய்யினுடைய ஒரு படமும் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் கண்டிப்பா நான் துணிவு படத்தைத் தான் பார்க்கப் போவேன் என்று கூறினார். இவரின் இந்த பேச்சினால் விஜய் ரசிகர்கள் இவரை கிண்டலடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement