• Nov 17 2024

டி.ராஜேந்தர் பூரண நலம் பெற்று தமிழுக்கு சேவையாற்ற வேண்டுகின்றேன்- இயக்குநர் பாரதிராஜா போட்ட முக்கிய பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் டி ராஜேந்தர். இவர் நடிப்பில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர் அண்மையில் இலங்கையின் நிலை குறித்து ஒரு பாடலையும் பாடி இருந்தார். இவ்வாறு படப்பிடிப்புகளில் படு பிஸியாக இருந்து வந்த இவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதன்படி இன்றைய தினம் அவரது மகனும் நடிகருமான சிம்பு அப்பாவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இயக்குநரான பாரதிராஜாவும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பேரன்பு கொண்ட சகோதரர் டி ராஜேந்தர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றும் அவர் பூரண நலம் பெற்று தமிழுக்கும் தமிழ் திரையுலகிற்கும் தொடர்ந்து சேவையாற்ற இயற்கையை வேண்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement