• Sep 20 2024

“இவர்கள்கூட இருப்பதால்தான் என்னால் தைரியமாக இருக்க முடிந்தது..”-கமல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்ரம் படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இப்படம் தமிழகத்தில் 75 கோடி ரூபாய் ஷேர் வந்துள்ளது என விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.இந்நிலையில் இது பற்றி கமல் கூறியதாவது…

"ஒரு படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என ஒருவர் சொல்ல முடியாது. சினிமா தெரிஞ்சவங்களுக்கு அது தெரியும். RKFI என்பது நான்கு எழுத்துன்னு நினைச்சுட்டு இருக்கீங்க. மேலும் அதுக்கு பின்னாடி 40 பேர் இருக்காங்க. முக்கியமா மூணு பேரு. அதுல சந்திரஹாசனையும் டி.என்.எஸ்ஸையும் இழந்திருக்கிறேன். அவர்கள் இடத்தை மகேந்திரனும் டிஸ்னியும் நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். பேர் தெரியத் தேவையில்லை என ஒதுங்கி நிற்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சினிமாவில் வேலை கிடைக்கணும் என வந்தவன் நான். நடிப்பதற்காக சினிமாவுக்கு வரவில்லை. மேலும் அதனைக் காட்டியவர் பாலசந்தர். உங்களை மாதிரி டெக்னீசியன் ஆகணும்னு சொன்ன போது, 'அட, போடா. ஆட்டோவுக்கு அலையுற. உனக்கு கார் வாங்கி தரேன். நீ நடி. அப்புறம் பாரு' என என்னை நடிக்க வைத்தவர் பாலச்சந்தர். அவர் படங்களில் மட்டுமே வெவ்வேறு ரோல் பண்ணிட்டு இருந்தா போதும் என இருந்தவனுக்கு பல வெற்றிகளைத் தமிழக மக்களும், தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் பத்து வருட காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் என்னால் வெளியிட முடிந்த ஒரே படம் இதுதான். அதற்குக் காரணம் மகேந்திரன், உதயநிதி ஸ்டாலின். இவர்கள்கூட இருப்பதால்தான் என்னால் தைரியமாக இருக்க முடிந்தது. உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடித்தாலும், பாலிடிக்ஸ் பண்ணினாலும் இதை மட்டும் விட்டுவிடாதீர்கள் எனக் கேட்டு கொள்கிறேன். இத்தனை நேர்மையோடு பட விநியோகத்தை மேற்கொள்வது நிச்சயம் இந்தத் துறைக்கு அவசியம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement