தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் அட்டகத்தி என்னும் படத்தில் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான “சர்பட்டா பரம்பரை” திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இப்படத்தில் துஷாரா விஜயன், ஷபீர் கல்லாரக்கல், ஜான் கொக்கன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.இந்த நிலையில், படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜான் கொக்கன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சர்பாட்டா பரம்பரை படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “படத்தில் நானும் ஆர்யாவும் 2 நிமிடம் சண்டைபோடும் காட்சி வரும். அந்த காட்சியில் நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்வது போல கட்டப்பட்டிருக்கும்.
இந்த காட்சியின் போது எனக்கு தலையில் கொஞ்சம் வேகமாக அடிபட்டுவிட்டது. ஆர்யா அடித்த அடில நான் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டேன். என் மனைவிக்கு போன் செய்து இந்த விஷயத்தை அவரிடம் சொன்னேன் பயந்துவிட்டார் ” என்று தெரிவித்துள்ளார்.
Listen News!