• Sep 20 2024

அப்பா கிட்ட அதுக்காக கோபப்பட்டிருக்கிறேன் வாய்ப்பு கேட்டு நின்றதில்லை- ஏ.ஆர் ரகுமானின் மகள் கதீஜாவின் மனம் திறந்த பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் இசைப் புயல் என்று அழைக்கப்படுபவர் தான் ஏ. ஆர் ரகுமான். இவரது இசையில் வெளியாகிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் இவருடைய மகளான கதீஜா பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அதாவது அவர் கூறியதாவது நான் எந்திரன் படத்தில் இடம் பெற்ற புதிய மனிதா பாடலில் பாடி இருந்தேன். அப்போ எனக்கு சின்ன வயசு அந்தப் பாட்டு செம ஹிட்டானதால் நான் திரும்ப பாடுவேன் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிடுச்சு. அதன் பின்னர் நான் பிரேக் எடுத்திட்டேன். ஆனால் எங்க வீட்டில தான் சர்ப்போட் பண்ணினாங்க திரும்ப பாட சொல்லி அதனால நானும் திரும்ப மியூசிக் பண்ணலாம் என்று ஆரம்பிச்சிட்டேன்.


எனக்கு எல்லா வகையான பாடல்களும் பிடிக்கும். அப்பாட சோங்ல எல்லாமே பிடிக்கும் எனக்கு. அவர் ஆல்பம் பாடல்கள் எல்லாம் வியூ வரணும் என்று எடுக்கமாட்டாரு. அவருக்கு சரியா பண்ணனும் என்று பண்ணுவாரு அது தான் அவரோட ஒரிஜினல். ஒரு ப்ரொஜெக்ட் பண்ணுறதும் நான் கேட்க மாட்டேன். அவராக் கொடுத்தால் அதுவும் வாய்ப்பு வந்தால் பண்ணிக் கொடுப்பேன்.

அப்பாவின் ஆல்பம் பாடல்கள் சில டைம்ல அதிக வியூ வராது ஆனால் பாட்டு எல்லாம் சூப்பராக இருக்கும் நான் எங்க அப்பா கிட்ட கேட்பேன்.நல்ல சோங் தானே எதனால சரியா ப்ரமோட் பண்ணப்படல ஏன் வியூ ஆகல என்று கேட்பேன் ரொம்ப கோபம் வரும் . ஆனால் அவர் தன்னோட வேலையை செய்திட்டே இருப்பாரு. எல்லோரும் என்கிட்ட கேட்பாங்க அப்பா கூட சேர்ந்து அடுத்து என்ன பண்றீங்க என்று ஆனால் எனக்குத் தெரியாது நான் அப்பா கிட்ட வாய்ப்புக் கொடுங்க என்று கேட்டதில்லை. வீட்டில கூட வேலை குறித்து பேச மாட்டோம். ஆனால் நான் ஏதாவது வேலை பார்த்தால் அப்பா கிட்ட போய் சொல்லுவேன்.அந்த ப்ரொஜெக்ட் பண்ணுறேன் என்று அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாரு.


ஆனால் நானாக போய் அவர் கிட்ட வாய்ப்பு கொடுங்க என்று கேட்டதில்லை. அப்பா ஓஸ்கார் விருது வாங்கினப் போ நான் சின்னப் பொண்ணு தானே அதனால அதன் அர்த்தம் புரில ஆனால் இப்போ நினைக்கும் போது ரொம்ப பெருமை யாக இருக்கும். ரொம்ப எமோஷனலாக இருக்கும். அதே போல என்னோட லைப் பாட்னரும் எனக்கு சர்ப்போட் பண்ணிட்டு தான் இருக்காரு.

நான் பண்ண முடியாது என்று சொன்னாலும் அவர் எனக்கு சர்ப்பேட் பண்ணிட்டே இருப்பாரு அதனால தான் ரெண்டு பேரும் ஹப்பியா இருக்கிறோம். மேலும் தொடர்ந்து பேசி இவர் தெருக்குரல் அறிவு கூட பாடுவதற்கு நெல்சன் கிருத்திகா என்பவராலேயே பாடுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அறிவு ரொம்ப சர்ப்போட் பண்ணினாரு அதனால தான் அவர் கூட பாடினேன். நான் நல்லா பாடினால் அப்பா கூப்பிட்டு வாழ்த்து சொன்னாரு. உன்னோட சொந்த முயற்சில முன்னேறி வருகிறாய் என்று பாராட்டினாரு அது எனக்கு பெருமை யாக இருந்திச்சு.


மேலும் நெக்கட்டிவ் விமர்சனம் வரும் போது முதலில் கவலையாக இருக்கும் பின்னர் சிலதை கடந்து போய்டுவேன். சில நேரம் அதுவும் கஷ்டமாக இருக்கும். மேலும் எல்லா விஷயத்தையும் முயற்சி செய்யிறது தான் அது தோல்வி அடையும் அல்லது வெற்றியடையும் ஆனால் முயற்சி செய்திட்டே இருக்கணும் என்றும் இன்னும் பல விடயங்களை அந்த விடயத்தில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. 

Advertisement

Advertisement