• Nov 11 2024

14 நாட்கள் நிர்வாணமாக இருந்தேன்-உயர மரத்தில் உண்மையாகவே கட்டி தொங்கவிட்டார்கள்-பாலா படம் குறித்து மனம் திறந்த பிரபல நடிகர்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயக்குநர் பாலா.இதனைத் தொடர்ந்து , பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.கடைசியாக சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கினார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

மேலும் பாலா படப்பிடிப்த்தளத்தில் கடுமையாக நடந்து கொள்வார் என்ற அச்சமும் உண்டு. இந்நிலையில் அவன் இவன் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகரும் இயக்குநருமான ஜிஎம் குமார். பாலா இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான அவன் இவன் படத்தில் ஜமீன் பரப்பரையை சேர்ந்தவராக நடித்திருந்தார் ஜிஎம் குமார்.


நகைச்சுவை மற்றும் செண்டிமென்ட் கலந்தது கதாப்பாத்திரம் அவருடையது.க்ளைமேக்ஸ காட்சியில் ஜிஎம் குமார் நிர்வாணமாக நடித்திருப்பார். வில்லன் அவரை நிர்வாணப்படுத்தி ஓட ஓட அடித்து விரட்டுவார். கடைசியில் கொன்று மரத்தில் நிர்வாணமாக கட்டி தொங்கவிட்டிருப்பார். இந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கம்பட்டி ஜமீன் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என பாலா விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த காட்சி படமாக்கப்பட்டது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஜிஎம் குமார். அதாவது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் பாலா திடீரென தனது அருகில் வந்து க்ளைமேக்ஸை மாற்றிவிட்டேன், நீங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கூறினார். பாலா கூறிவிட்டு சென்றதில் இருந்தே ஜிஎம் குமாருக்கு எதுவும் புரியவில்லையாம். எப்போது அந்த காட்சியை படமாக்குவார்கள் என்ற பயத்துடனே இருப்பாராம்.நிர்வாண காட்சிகள் மொத்தம் 14 நாட்கள் படமாக்கப்பட்டதாம். 


7 நாட்கள் நிர்வாணமாக நடித்ததாகவும் எஞ்சிய 7 நாட்கள் நிர்வாணமாக மரத்தில் தொங்கியதாகவும் தெரிவித்துள்ளார் ஜிஎம் குமார். மாடுகளுக்கு இடையில் மழையில் ஓடுவது, வில்லன் தன்னை அடிப்பது என அந்த காட்சி படமாக்கப்படுவதற்குள் தான் ஒரு வழியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார் ஜிஎம் குமார். மேலும் 80 அடி உயர மரத்தில் உண்மையாகவே நிர்வாணமாக கட்டி தொங்கவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.மேலும் இயக்குநர் பாலா ஒரு குழந்தை போன்றவர் என்றும், அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்றும் கூறி புகழாரம் சூட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement