• Sep 21 2024

'நான் முதலில் விக்ரம் படத்தில் இல்லை'- நடிகர் விஜய் சேதுபதி கூறிய சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தத் திரைப்படத்தினை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது.

விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினார்கள். படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி பேசும்போது “நான் முதலில் விக்ரம் படத்தில் இல்லை. ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என நினைத்தேன்

என் கதாபாத்திரம் பல நடிகர்களுக்கு சென்று கடைசியில் நான் நம்பியபடி என்னிடமே வந்து சேர்ந்தது” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement