சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபல காமெடி ஷோவில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் தான் ரோபோ சங்கர்.பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவராக வலம் வந்த இவர் அண்மையில் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டார். இதற்கு காரணம் மஞ்சள் காமாலை நோய் தான் என்று கூறப்பட்டு வந்தது.
இதனை அடுத்து தற்பொழுது அதிலிருந்து மீண்டு வந்த இவர் தன்னுடைய கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில், மருத்துவக்கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது தான் 5 மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவித்தேன் என்பதை கூறி இருக்கிறார்.
“கடந்த ஒரு 4 மாசமா யூடியூப்ல நான் தான் சூப்பர்ஸ்டாரா இருந்தேன். தெரியாத்தனமா கிளிய வளர்த்துட்டேன். கிளி வளர்த்தா அது நம்ம பேரை சொல்லும், நம்மளோடு விளையாடும்னு நினைச்சு வளர்த்தேன். அதுனால நான் பெரும்பாடு பட்டேன். பின்னர் சினிமாவுக்கு உடல் எடையை குறைத்தேன். அப்போது தான் எனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துருச்சு.
அதனால் ஒரு 5 மாசம் படுத்த படுக்கையா இருந்து, சாவின் விளிம்புக்கு போயிட்டேன். அதற்கு காரணம் என்னிடம் இருந்த சில கெட்ட பழக்கங்கள் தான். அதற்கு நான் அடிமையாகிவிட்டேன். கடந்த ஜனவரி மாத வாக்கில் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டேன்.
அந்த நேரத்துல நக்கீரன் கோபால் தான் என்னை சரியான ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மஞ்சள் காமாலை நோயின் உடலில் எந்த அளவுக்கு பரவி இருக்கிறது. அதனால் என்னுடைய உடலில் எந்தெந்த பாகங்கள் எல்லாம் பாதித்துள்ளன என்பதை தெரிந்துகொண்டேன். மருத்துவர்களுடைய சரியான அட்வைஸை பாலோ பண்ணியதாலும், என் குடும்பத்தினர் பார்த்துக்கொண்டதாலும் தான் இன்று அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
இத்தனை வருடம் திரைத்துறையில் இருந்ததன் மூலம் எனக்கு கிடைத்த நண்பர்கள் அனைவரின் பிரார்த்தனையாலும், அவர்கள் நீ நிச்சயம் திரும்ப கம்பேக் கொடுப்ப என ஊக்கப்படுத்தியதாலும் தான் நான் இன்று மீண்டு வந்திருக்கிறேன். இப்போ எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல, ஹாப்பியா நல்ல சந்தோஷமா இருக்கேன்” குடிப் பழக்கத்தை விடுவது நல்லம் குடும்பத்திற்காகவாவது அந்த பழக்கத்தை விடுவது நல்லம் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!