90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரேவதி. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ரேவதி பேட்டியில் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது; என்னுடைய அம்மாக்கு கிளாசிக் டான்ஸ் பிடிக்கும்.8 வயதிலிருந்துடான்ஸ் கத்துக்கிட்டன்.அவர் எப்போவும் எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க.நவரசங்களும் டான்ஸ்ல கத்துக்கிட்டதால படம் நடிப்பதற்கு நல்லாவே உதவிச்சு.
என்ன முகபாவனை என்றாலும் என்னால் செய்யக்கூடிய மாதிரி இருந்திச்சு.பாரதிராஜா பிரதர் ஜெயம்ராஜ் சார் என்னை ஸ்கூல் பஸ் ஸ்டாப்ல பாத்திட்டு இந்த பொண்ணு அழகா இருக்கே என்று பாத்திட்டு போய்ட்டாரு..பிறகு எனது மாமா மூலம் வீட்டுக்கு வந்து நடிக்க கேட்டாங்க.அப்போ எனக்கு 16 வயது தான்.என பல சுவாரிஸ்ய தகவல்களை பகிர்ந்திருந்தார்
Listen News!