விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர் கவின். இதனையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மூன்றாவது சீசனில் போட்டியாளராக நுழைந்த இவரின் கெரியருக்கு இந்நிகழ்ச்சி மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடிப்பில் 'லிப்ட்' என்ற படம் வெளியானது.ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான 'லிப்ட்' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஆகாச வாணி என்ற வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்தார். இதன் இடையில் தற்போது கவின் நடிப்பில் 'டாடா' என்ற படம் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் கணேஷ் பாபு இயக்கியுள்ள இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கவினுடன் அபர்ணா தாஸ், பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'டாடா' படம் கடந்த 10 ஆம் தேதி தேதி திரையரங்குகளில் வெளியானது.இந்நிலையில் இந்தப்படம் வெளியானதில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். குடும்பத்துடன் பார்க்க பீல் குட் டிராமா என கமெண்ட்களும் கிடைத்துள்ளது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் 'டாடா' குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், டாடா படம் தொடர்பாக பாசிட்டிவ் விஷயங்களை கேள்விப்படுகிறேன். வாழ்த்துகள்டா கவின் . டாடா படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த வாழ்த்திற்கு பதிலளித்துள்ள கவின், ஆசிர்வாதங்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். மிக்க நன்றினா. லவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார். லோகேஷ் மற்றும் கவினின் இந்த டுவிட்டர் பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Listen News!