• Nov 17 2024

யோகிபாபு சொன்னதால் தான் அங்கு போனேன் 20 நாளில் என் உடம்பில் அரிப்பு எதுவுமே இல்லை-காதல் சரண்யா ஷேரிங்.

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2004ம் ஆண்டு வெளியாகிய சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் காதல். இப்படத்தில் கதாநாயகனாக பரத்தும் கதாநாயகியாக சந்தியாவும் நடித்திருந்தனர்.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருந்தது.


இப்படத்தில் தோழி காரெக்டரில் நடித்து பிரபல்யமானவர் தான் சரண்யா நாக்.இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் சரியான அடையாளத்தைப் பெறவில்லை. இதனால்  2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். 

இவ்வாறு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் அண்மையில் ஓர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது எனக்கு எப்போதுமே திருத்தணி முருகன் ரொம்ப ஸ்பெஷல். சில ஆண்டுகளுக்கு முன்னாடி என்னுடைய கையில் அலர்ஜி வந்தது. என் நண்பர்கள் எல்லோருக்குமே அந்த விஷயம் தெரியும். அது ஒரு வகையான தோல் நோய் என்று சொன்னார்கள். இதனால் 2018 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை அதற்காக நான் பல சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அந்த அலர்ஜி பரவல் கை மூட்டு வரை பரவி விட்டது. 

இதனால் சினிமா வாய்ப்புகள் தவறி விடுமோ என்று பயந்தேன். பின் மருத்துவர்கள் இந்த காயம் உங்களுடைய உடல் முழுவதுமே வரும் என்று சொல்லியிருந்தார்கள். இதை என் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் என்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்றெல்லாம் பயந்து இருந்தேன். அப்போதுதான் யோகி பாபு அவர்கள் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அவர், எல்லா நல்ல விஷயத்துக்கும் நான் திருத்தணிக்கு போவேன் என்று சொல்லியிருந்தார். 

அதை பார்த்து தான் நானும் திருத்தணி போயிட்டு வரலாம் என்று திருத்தணிக்கு போனேன். அங்கு உப்பும், மிளகும் வாங்கி என் உடம்பு முழுக்க சுத்தி போட்டுவிட்டு கால், கை கழுவி விட்டு சாமியை கும்பிட்டு வந்தேன்.அப்ப மருந்து வாங்க கூட என்னிடம் காசு இல்லை. பின் 20 நாளில் என் உடம்பில் அரிப்பு எதுவுமே இல்லை. ஒன்றரை மாதத்தில் என் கையில் இல்லை. அந்த காயம் மறைந்து விட்டது. வெறும் பத்து ரூபாய் உப்பு, மிளகு என் வாழ்க்கையில் மிகப்பெரிய அற்புதம் செய்யும் என்று நான் நினைக்கவே இல்லை. இது எல்லாம் திருத்தணி முருகனின் திருவிளையாடல் தான் என்று சரண்யா தன்னுடைய பூஜை அறையில் இருக்கும் பல்வேறு தெய்வங்கள் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி இருக்கிறார்.


Advertisement

Advertisement